மரண தண்டனையை முடிவுக்கு கொண்டுவருகின்றது மலேசியா !

Friday, October 12th, 2018

மலேசியாவில் மரண தண்டனைகளுக்கு முடிவு கட்ட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சட்டத் துறை அமைச்சர் ஊகியாங் கூறியதாவது:

மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.அதற்கான சட்டத் திருத்தங்கள் எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

மலேசியாவில் கொலை, போதை மருந்து கடத்தல், தேசத் துரோகம், ஆள் கடத்தல், பயங்கரவாதம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த நாட்டில் 1,200-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ளனர்.இந்த சூழலில், மலேசிய அரசின் இந்த அறிவிப்பை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Related posts: