அமெரிக்காவை முழுமையாக தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தயார் -வடகொரியா அதிபர்

Saturday, July 29th, 2017

வடகொரியா மேற்கொண்டுள்ள புதிய ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா சமீப காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகள் குறித்து உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தும், வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தும் அதை பொருட்படுத்தாமல் அந்நாடு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறனுடையது என்றும், இது ஜப்பான் கடற்கரை எல்லையில் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை 45 நிமிடங்களில் சுமார் 3,000 கி.மீற்றருக்கும் அதிகமான தொலைவில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கூறுகையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது உறுதியும் செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்தில் எந்த பகுதியையும் இங்கிருந்தே தாக்க முடியும் என்று கூறியுள்ளார். வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து ஜப்பான அரசு பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Related posts: