பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல் – 64 பேர் பலி

Thursday, May 12th, 2016

ஈராக் தலைநகரான பாக்தாத் சந்தை ஒன்றில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 64 பேர் பலியாகியுள்ளனர்.

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் ஷியா முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த Sadr நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் நேற்று காலை மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

இத்தாக்குதலில் இதுவரையில் 64 பேர் பலியாகியுள்ளனர், 87 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன், ஷியா முஸ்லிம்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், காய்கறி மற்றும் பழங்களால் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மார்க்கெட்டுக்கு வந்ததாகவும், பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மக்களோடு மக்களாக கலந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் திடீரென அந்த வாகனம் வெடித்து சிதறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: