சீனாவின் நடவடிக்கை: தென்னாசிய பிரந்தியத்தில் பெரும் பதற்றம்!

Thursday, February 23rd, 2017

சீனா நாட்டின் யுத்தக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் திடீர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக ஆயுத பலத்தை சீனா அதிகரித்து வருகின்றது.

அத்துடன், இராணுத்துறையிலும், பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், தனது நாட்டு போர் கப்பல்களை இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடந்த காலங்களில் அனுப்பி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனா நாட்டின் கடற்படையினர் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் திடீர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பு எதுவும் இன்றி சீனா இன்று ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் தென்னாசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: