ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முடியாது – இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!

Sunday, April 30th, 2023

இலங்கை உள்ளிட்ட இறைமையுள்ள எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லிவான் ஜர்கர்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகெட தொடர்பில் அமெரிக்கா விதித்துள்ள தடை பற்றி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தினால் போதும் என குறிப்பிட்ட அவர், மேற்குலகில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவர்களிடையேயும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறான நிலையில், இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என உங்களிற்கு பாடம் நடத்த எவருக்கும் உரிமை இல்லை. இது உங்களின் உள்விவகாரம் என ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு நீங்கள் கல் எறியக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய நோக்கம் உலகில் உள்ள சூழ்நிலைகளை சீர்குலைப்பதாகும், மேலும் அவர்கள் ரஷ்யாவில் மட்டுமின்றி பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் - மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க...
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல - சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள...