ஒரு மில்லியனுக்கு மேலான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த சீனா!

Tuesday, October 25th, 2016

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கு மேலான அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

பெய்ஜிங்கில் ரகசியமாக நடைபெறும் கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆரம்பித்து வைத்த உயர் அதிகாரிகள் செய்த ஊழலை விசாரிக்கும் நடவடிக்கையின் தாக்கத்தை இது காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் ஊழல் அதிகாரிகள் 400 பேருக்கு அதிகமானோர், இந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருப்பதாக சீன கம்யூனிச கட்சியின் மத்திய ஒழுங்குமுறை ஆணையமும் கூறியிருக்கிறது.

நான்கு நாட்கள் நடைபெறும் அனைத்து கட்சி பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கும் விதிமுறை மாற்றங்கள், அதிபர் ஷி ஜின்பிங்-கிற்கு அதிக அதிகாரத்தை கொடுப்பதாக அமையும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

_92066715_b5a76f6c-9278-476b-954f-ab221fb587d1

Related posts: