பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்!

Sunday, January 7th, 2018

தீவிரவாதிகளை ஒடுக்காத வரை பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்தித்தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி வலைச்சமூகம், அல்கொய்தா, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது அந்த நாட்டின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகளை ஒழிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி அமெரிக்க தலைவர்களிடம் (அதிபர்களை) இருந்து பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி (33 மில்லியன் டாலர்) பாதுகாப்பு நிதி பெற்றுள்ளது.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது என குற்றம் சாட்டினார். இத்தகைய நடவடிக்கை தொடர்ந்தால் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் நிறுத்தப்படும் என அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து 2016-ம் ஆண்டுக்கான வெளிநாட்டுக்கான இராணுவ உதவி ரூ.1500 கோடி உடனடியாக நிறுத்தப்பட்டது

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் பேசுகையில், தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் மென்மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது தொடர்பாக நாங்கள் முடிவுகள் எடுப்போம். அவர்கள் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், அமெரிக்கா செய்தித்தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து தீவிரவாத குழுக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள், ஹக்கானி தீவிரவாத குழுக்களின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்த பிறகே பாதுகாப்பு உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும்.

மேலும், கூடுதலாக 2017-ம் ஆண்டு வழங்க கூடிய நட்பு நாடுகளுக்கான நிதி உதவி ரூ.6 ஆயிரம் கோடி (900 மில்லியன் டாலர்) நிதி உதவியை பாதுகாப்புதுறை தற்போது நிறுத்தியுள்ளது. இதன் முலம் இதுவரை ரூ.7500 கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது என ஹெதர் கூறினார்.

Related posts: