அமெரிக்காவுடனான உறவுகளை புதுப்பிக்க ரஷ்யா இணக்கம்

Sunday, July 30th, 2017

புரிந்துணர்வின் அடிப்படையில் உலகளாவிய ரீதியிலான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் அதன் பொருட்டு அமெரிக்காவுடனான உறவுகளை சீர்செய்ய விருப்பம் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க மற்றும் ரஷ்ய இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுபட்டுக் காணப்பட்ட ரஷ்ய அமெரிக்க உறவுகளில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் முதல் மேன்மேலும் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

அமெரிக்கத் தேர்தல் காலத்தில் ரஷ்யா தலையீடு செய்தது என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த இரு நாடுகளினதும் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: