அமெரிக்க ஆதரவு இன்றி நேட்டோ பலவீனமடைந்துவிடும் -மெர்க்கல்!

Friday, February 17th, 2017

நேட்டோ அமைப்பு அமெரிக்காவின் ஆதரவு இன்றி பலவீனமடைந்துவிடும் என்று ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ அமைப்பில் ஜெர்மனி தனது நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேர்லினில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  மெர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ நேட்டோ இல்லாது, அத்லான்டிக் உறவு இல்லாமல், அமெரிக்காவின் இராணுவ திறன்கள் இன்றி ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய திவிரவாதிகளை முறியடிக்க முடியாது என்பதை ஜேர்மனிய அதிபராக நான் தெரிவிக்கின்றேன். அதேவேளை நேட்டோ கூட்டமைப்பில் நாம் நேர்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுவரை நாம் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் பாதுகாப்பு செலவீனம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.19 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

w-1

Related posts: