ஆபிரிக்க கண்டமே கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Saturday, April 18th, 2020

மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையமாக ஆபிரிக்க கண்டம் மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த வாரத்தில் ஆபிரிக்க கண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கு காரணம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஆபிரிக்க கண்ட நாடுகளில் மாத்திரம் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் வரை இறக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆபிரிக்க கண்டத்தில் சுமார் மூன்று கோடி மக்கள் வறிய நிலைமைக்கு செல்லக் கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஆபிரிக்காவில் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்து காணப்படுகிறது.

எனினும் ஆபிரிக்காவில் சன நெருக்கடி மிக்க நகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடும் எனவும், மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அதனை கட்டுப்படுத்துவது சிரமமாக அமையலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது

Related posts: