ஜூலை 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைப்பு!

Saturday, June 27th, 2020

ஜூலை 15 ஆம் திகதிவரை சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.ஜி.சி.ஏ அறிவித்துள்ளது.

இது குறித்து டி.ஜி.சி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு மற்றும் இந்தியா வருவதற்கான சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15-ம் திகதி  இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனினும் தேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வழித்தடத்தில் சிறப்பு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். ஜூலை 15 வரையிலானகட்டுப்பாடு சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து சில தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் சர்வதேச விமான சேவைகள் குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

Related posts: