இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி!

Saturday, September 29th, 2018

இந்தோனேியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து தற்போது சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய Sulawesi மற்றும் Sulawesi சுலவேசி மாகாணங்களில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களை அந்த பகுதிகளை விட்டு வெளியேறும்படி புவிசார் மற்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சுனாமி தாக்கியுள்ளது. சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகிவுள்ளதாகவும் பத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, 2004ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

Related posts: