ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்!
Tuesday, March 20th, 2018
ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இராணுவ புரட்சியின் மூலம் ஜனாதிபதி ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இடைக்கால அதிபராக எம்மெர்சன் நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் ஜிம்பாப்வே ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தேர்தல் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எம்மெர்சன் நாங்காவா தெரிவித்துள்ளார்.
Related posts:
டிரம்ப் கருத்துக்கு ஜெர்மனி கடும் எதிர்ப்பு!
அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று: பிரான்சில் மே வரை ஊரடங்கு நீடிப்பு!
இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்கள் - குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும் என நம்...
|
|