மீண்டும் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஜப்பான்!

Friday, December 23rd, 2016

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஆரம்ப காலம் தொட்டே பிரச்சினைகள் நிலவி வருகிறது. குறிப்பாக சீனக்கடல் விவகாரத்தை அடையாளப்படுத்தலாம்.

அதுமட்டுமன்றி அண்மைக்காலமாக வட கொரியாவும் ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கின்ற ஒரு நாடாக மாறி வருகின்றது. மேலும் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், ஜப்பானுக்கு மிரட்டலாக அமைந்துள்ளது.

எனவே ஜப்பான் அச்சுறுத்தல்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், எதிரி நாடுகளை அதிர வைக்கும் அளவுக்கு ஜப்பான் இராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை நிதி (97.5 டிரில்லியன் யென்) ஒதுக்கியுள்ளது.

இவற்றுள் போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்களுக்காக 43.6 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகளவாக ஒதுக்கப்பட்டுள்ளது. (சுமார் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 140 கோடி)

மேலும் ஜப்பான் 5 புதிய பெரிய ரோந்து கப்பல்கள் வாங்கவும் முடிவு செய்துள்ளது. அத்துடன் 200 கடல்சார் சட்ட பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு ஏற்ப தனது நாட்டின் ஏவுகணை திட்டங்களை மேம்படுத்தவும் ஜப்பான் தீர்மானித்து உள்ளது.

எனவே உலக நாடுகளுள் இராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள முதல் நாடு எனும் சாதனையில் தடம் பதிக்கவுள்ளது ஜப்பான்

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: