ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை பரிசோதனை!

Monday, September 5th, 2016

வடகொரியா தன்னுடைய கிழக்கு கடல்பகுதியில் மூன்று ஏவுகணைகளை ஏவியது என்று தென்கொரிய செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியா நீர்மூழ்கி ஏவுகணை சோதனையை நடத்தியது என்று செய்திகள் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் மூன்று ஏவுகணைகளை வீசிஉள்ளது. கவாங்சு கவுண்டியில் இருந்து மூன்று ஏவுகணைகளை ஜப்பான் கடற்பகுதியை (கிழக்கு கடல்பகுதி) நோக்கி வீசியது என்று தென்கொரியா பாதுகாப்பு அதிகாரி கூறியதாக யோன்கப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் ஏவுகணை எத்தனை கிலோ மீட்டர் தொலைவை இலக்காக கொண்டு தாக்கும் திறன் கொண்டது என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவருடைய அரசாங்கம் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ராணுவ குவிப்பையும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியாவுக்கு எல்லையிலும், கடலோர பகுதியிலும் அமெரிக்கா வான் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. தவிர, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கடந்த சில வாரங்களாக மிரட்டல் விடுத்து வருகிறது. தவிர கண்டனம் விட்டு கண்டம் பாயும்  அதிநவீன ஏவுகணைகளையும் செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘ரோடோங்’ என்னும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா செலுத்தும் சோதனையில் ஈடுபட்டது. கடந்த மாதம் 3-ம் தேதி வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பானின் கடல் எல்லைக்கு உட்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் விழுந்தது. நல்லவேளையாக இதில் ஜப்பானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜப்பான் கடல் எல்லைக்குள் ஏவுகணையை வடகொரியா செலுத்தியது இதுவே முதல் முறையாகும். இருப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த தாக்குதல் எங்களது பாதுகாப்புக்கு வடகொரியா விடுத்துள்ள மிகப்பெரிய மிரட்டல் ஆகும். அத்துமீறிய இந்த செயலை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இனியும் இதுபோல் ஏதாவது நடந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக் கும் வலிமை எங்களிடம் உண்டு என்று ஜப்பான் கூறியது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா மூன்று ஏவுகணைகளை வீசிஉள்ளது.

160303095544_north_korea_missiles_640x360_epa_nocredit-1

Related posts: