எதியோப்பிய அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவரானார்!

Thursday, May 25th, 2017

எதியோப்பியாவின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான Tedros Adhanom  உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 70 ஆவது உலக சுகாதார ஸ்தாபனத்தின் மாநாட்டில் தற்போதைய தலைவர் மார்கிரட் சானை எதிர்த்து போட்டியிட்டு Tedros Adhanom புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எதியோப்பியாவின் வெளியுறவு அமைச்சராகவும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சராகவும் Adhanom பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: