வரலாறு காணாத அளவில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் கவலை!.

Sunday, December 24th, 2023

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளவில் டெங்கு நோய்த்தொற்றாளர்களில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 5,000க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், தமது 11 உறுப்பு நாடுகளில் 10 நாடுகள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உட்பட பல நாடுகளில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக டெங்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளின் தரவரிசையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:


தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து...
76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!
எரிபொருளின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவ...