76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!

Wednesday, September 7th, 2022

நெதர்லாந்தில் 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் 12 வீதமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நெதர்லாந்தின் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(6) வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகளில் எரிசக்தி செலவீனமே தற்போதைய பணவீக்கத்திற்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இதே காலப்பகுதியில் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் விலை இருந்ததை விட ஓகஸ்ட் மாதத்தில் 151 வீதம் அதிகமாக இருந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுதவிர ஆடை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் பணவீக்கத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணய வலைய நாடுகளின் பணவீக்கத்தை விடய நெதர்லாந்தில் அதிக பணவீக்கம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: