கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தீவிரம்!

Thursday, August 4th, 2016

அரச படையின் முற்றுகையை தளர்த்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் சிரிய அலெப்போ நகரில் மோதல் உக்கிரமடைந்துள்ளது.

நகரின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு பகுதி மீதான சுற்றிவளைப்பை முறியடிக்க கடந்த ஞாயிறு தொடக்கம் கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.ரமெளசாஹ் மாவட்டத்தின் இராணுவ நிலைகளுக்கு கீழால் கிளர்ச்சியாளர்கள் பாரிய சுரங்க குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனினும் அரச படை ரஷ்யாவின் வான் தாக்குதல் உதவியோடு கிளர்ச்சியாளர்களை முறியடிக்க முயன்று வருகின்றனர்.

கடந்த மாதம் கடைசி விநியோகப்பாதையையும் அரச படை துண்டித்ததை அடுத்து கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சுமார் கால் மில்லியன் சிவிலியன்கள் முற்றுகையில் சிக்கியுள்ளனர்.“ரமெளசாஹ் பகுதியை இலக்கு வைத்து நாம் செயற்பட்டபோதும் அங்கு ரஷ்ய போர் விமானங்களின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக வர்ணிக்கப்பட்டிருக்கும் அலெப்போ மோதலுக்கு சுமார் 10,000 துருப்புகள், குறைந்தது 95 டாங்கிகள் மற்றும் பலநூறு ரொக்கெட் லோஞ்சர்கள் நிறுவப்பட்டிருப்பதாக மற்றொரு கிளர்ச்சியாளர் தரப்பு ராய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளது.இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அதிக எண்ணிக்கையான தற்கொலை குண்டுதாரிகளும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக உள்ளதென பிரிட்டனை தளமாகக் கொண்டு செயற்படும் சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு வர்ணித்துள்ளது.பிளவுபட்டிருக்கும் இந்த நாகரின் பல போர் முனைகளிலும் மோதல் இடம்பெற்று வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் ரஷ்ய போர் விமானத்தின் உதவியுடன் அரச துருப்புகள் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.“இந்த பதில் தாக்குதல்கள் மந்தமாக இருப்பதால் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஞாயிறு தொடக்கம் கைப்பற்றிய எட்டு நிலைகளில் ஐந்தை அரச துருப்பினரால் மீட்க முடிந்தது” என்று கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று கிளர்ச்சியாளர்களின் பதில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், 50 கிளர்ச்சி போராளிகள் மற்றும் ஜிஹாதிக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மேற்படி கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.அலெப்போவுக்கு அருகில் சரகப் நரகரில் குளோரின் வாயு (விசவாயு) கொண்ட பீப்பாய்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளோரின் வாயுவால் மூச்சுத் திணறல் மற்றும் வாயால் இரத்தம் கக்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனினும் இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் உறுதியாகவில்லை.ரஷ்ய போக்குவரத்து ஹெலிகொப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் இருந்து ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலேயே கடந்த செவ்வாயன்று விசவாயு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னர் நாட்டின் வர்த்தக நகராக இருந்த அலெப்போ, கட்டடக்கலை மற்றும் தொல்பொருள் தலங்களை கொண்ட பகுதியாகும். இந்த வரலாற்று பொக்கிஷங்கள் ஐந்து ஆண்டு சிவில் யுத்தத்தில் அழிக்கப்பட்டோ அல்லது களவாடப்பட்டோ உள்ளன.

முற்றுகையில் சிக்கிய கிளர்ச்சியாளர் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும் கிளர்ச்சியாளர்கள் சரணடையவும் பாதுகாப்பான பாதைகளை சிரிய அரசு மற்றும் ரஷ்யா அறிவித்தபோதும் அந்த பாதைகளை குறைந்த எண்ணிக்கையிலானோரே பயன்படுத்தியுள்ளனர்.இங்கு வெறுமனே கட்டடங்களே இருக்கின்றன விவசாயம் செய்ய நிலமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 முதல் 30 தாக்குதல்களை நடத்துகின்றன. இங்கு எந்த கார் வண்டியும் ஓடுவதில்லை.

எரிபொருள் இல்லாததால் பொது போக்குவரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஷெல் குண்டுகளை தவிர்க்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்” என்றும் அந்த குடியிருப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: