குழந்­தைகள் சாகும்­போது வெளி­நா­டு­களில் சுற்றுப்யணமா? 10 வயது சிறுவன்  பிரதமர் மோடிக்கு கடிதம்!

Thursday, November 3rd, 2016

ஒடிசா மாநி­லத்தில் மூளைக் காய்ச்­ச­லினால் 73 பேர் பலி­யா­கி­யுள்ள நிலையில் நீங்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்­வது நியா­யமா? என்ற கேள்­வி­யுடன் பிர­தமர் மோடிக்கு பத்துவ­யது சிறுவன் எழு­தி­யுள்ள கடிதம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஒடிசா மாநி­லத்தில் பழங்­கு­டி­யின மக்கள் அதி­க­மாக வாழும் மல்­காங்­கிரி மாவட்­டத்­திற்­குட்­பட்ட 500இற்கும் அதிகமான கிரா­மங்­களில் ஜப்பான் மூளை­ய­ழற்சி நோய் படு­வே­க­மாக பரவி வரு­கி­றது.

பெரும்­பாலும் குழந்­தை­களை அதி­க­மாக தாக்கும் இந்த நோயினால் இது­வரை 73 பேர் பலி­யா­ன­தாக தெரியவந்துள்ளது.இந்­நி­லையில், மல்­காங்­கிரி மாவட்டம், சிகாப்­பள்ளி கிராம பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட போல்­கன்டா பள்­ளியில் நான்காம் வகுப்பில் படித்­து­வரும் உமேஷ் மாதி என்ற பத்­து­வ­யது சிறுவன் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழு­தி­யுள்ளான்.

அந்த கடி­தத்தில் அவன் கூறி­யுள்­ள­தா­வது:-

ஐயா, ஜப்பான் ஜுரத்­துக்கு என்­னு­டைய நண்­பர்கள் பலர் பலி­யாகி விட்­டனர். உலகை சுற்­றி­வரும் நீங்கள் எங்கள் ஊருக்­கு­வந்து, இங்கு குழந்­தைகள் எப்­படி சாகி­றார்கள்? என்று பார்த்து எங்கள் உயிரை காப்­பாற்ற வேண்டும்.

உலகின் பல­நா­டு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் செய்யும் நீங்கள் எங்கள் கிரா­மத்தில் வசிக்கும் மக்­களின் பரி­தாப நிலையை பார்ப்­ப­தற்­காக இங்கு வரக்­கூ­டாதா? என்று தனது கடி­தத்தில் அவன் எழு­தி­யுள்ளான்.

ranil-0-0-450x251 copy

Related posts: