நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!

Friday, October 14th, 2016

நோபல் பரிசு பெற்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ இன்று காலமானார்.இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகராவார். இறக்கும் போது இவருக்கு 90 வயது.

டேரியோ போவின் மறைவினால் திரைப்படம், கலாசாரம் மற்றும் பொது வாழ்வில் சிறந்த நபர்களில் ஒருவரை நாடு இழந்துள்ளதாக இத்தாலி நாட்டின் பிரதமர் மேட்டியோ ரென்ஜி தெரிவித்துள்ளார்.

20ம் நூற்றாண்டில் தலைசிறந்த கேலிப்பேச்சு மற்றும் அரசியல் நையாண்டித்தனத்தில் போ சிறந்தவராவார். இவரது ஆக்சிடெண்டல், டெத் ஆம் ஆன் அனார்கிஸ்ட் மற்றும் கான்ட் பே, வோன்ட் பே ஆகியன இவரது படைப்புக்களில் பிரபலமடைந்தவை ஆகும். 1969ம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளியான மிஸ்மெரோ பஃபோ (நகைச்சுவையான மர்மம்) என்ற போவின் திரைக்கதை படைப்பு சர்ச்சையை எழுப்பியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2138341166cfb31cffe0bf3dfaafce16_L

Related posts: