ரூ.15 கோடி இழப்பு வழக்கில் இம்ரான் கானுக்கு ‘சம்மன்’

Sunday, August 5th, 2018

அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்தி, கைபர் மாகாணத்துக்கு, 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வரும், ௭ம் தேதி ஆஜராகும்படி, பாக்., பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளது.

இம்ரான்கானின் ‘தெஹ்ரிக் – இ – இன்சாப்’ கட்சி, பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில், ௨௦௧௩ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது. கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு, கைபர் மாகாணத்தில், அரசு ஹெலிகாப்டரை இம்ரான் கான் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் மூலம், அரசு கருவூலத்துக்கு, ௧௫ கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ் சாட்டி, தேசிய கணக்கு குழு, இம்ரான் கானுக்கு, ‘சம்மன்’ அனுப்பியது.இதுதொடர்பாக, ஜூலை, ௧௮ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

அப்போது, இம்ரான்கான் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், தேர்தல் முடிந்த பின் ஆஜராக உத்தரவிடுமாறு, வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து, வரும், ௭ல் ஆஜராகும்படி, இம்ரான் கானுக்கு, ‘சம்மன்’ அனுப்ப, நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அதன்படி, அவருக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளது.உதிரி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன், ௧௧ம் தேதி, பாக்., பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்க உள்ளார்.

Related posts: