வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி!

Thursday, December 22nd, 2016

இப்போதெல்லாம் உண்மையான செய்திகளை விடவும் வதந்திகளே மின்னல் வேகத்தில் பரவுகின்றன.இதற்கு பிரதான ஊடகமாக இருப்பது சமூகவலைத்தளங்களாகும். அதிலும் பேஸ்புக் ஆனது முன்னிலை வகிக்கின்றது. அண்மையிலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது பல போலியான செய்திகள் இணையத்தை வலம் வந்திருந்தன.

இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது பயனர்களக்கு புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இவ் வசதியின் ஊடாக குறித்த செய்தி அல்லது தகவல் போலியானதாயின் அது தொடர்பில் ரிப்போர்ட் செய்ய முடியும். எனினும் தற்போது இவ் வசதி பரீட்சார்த்த நிலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களின் பின்னூட்டல்களை பொறுத்து விரைவில் குறித்த வசதி நிரந்தரமாக தரப்படும் என தெரிகின்றது.

102165565-facebook.530x298

Related posts: