சிரியாவின் அமைதிக்கு ஐ.நாவில் அழைப்பு!

Saturday, March 25th, 2017

சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து  நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில்  ஐக்கிய நாடுகள் சபைக்கான  சிரியதூதுவர் ஸ்டாப்பென் டீ மிஸ்டூர அழைப்புவிடுத்துள்ளார்.

ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று சிரிய வன்முறை நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும்,  ஜெனீவாவில் பல்வேறு அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் சர்வதேச பங்களிப்பை சிரிய தூதுவர் வேண்டுகோளாகவிடுத்துள்ளார்.

சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக குடியேற்றங்களை தடுத்து சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை அந்நாடு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: