சிரியாவால் இரசாயனத் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்கா !

Tuesday, June 27th, 2017

சிரியாவில் மற்றுமொரு இரசாயனத் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அது போன்ற தாக்குதல் ஒன்று நடத்தப்படக்கூடாது எனவும் சிரிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் அந்நாட்டு அரசாங்கத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது என அமெரிக்கா தெரிவித்திருந்தது. குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக சில வழமைக்கு மாறான நடவடிக்கைகளை தான் அவதானித்ததாகவும் அதே போன்ற நடவடிக்கைகளை தற்போதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் வெள்ளை மாளிகை நேற்று (திங்கட்கிழமை)  தெரிவித்துள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள விமானத் தளம் ஒன்றின் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை முன்னெடுத்தது. அத்துடன் மற்றுமொரு இரசாயனத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அஸாட்டின் அரசங்கத்தால் இரண்டாவது இரசாயனத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டால் அதற்கு சிறந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் அதன் பாராதூரமான விளைவுகளை அஸாட் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Related posts: