சீன ஜனாதிபதியின் மிரட்டல்:  தைவானில் போர் பதற்றம்!

Friday, January 4th, 2019

சீன ஜனாதிபதியின் மிரட்டலான அறிவிப்பால் தைவானில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான் என சீன ஜனாதிபதி அதிரடியாக அறிவித்தார்.

அத்துடன், “தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம்” எனவும் கூறியுள்ளார்.

எனினும், எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் தெரிவித்துள்ளதுடன், சீன ஜனாதிபதியின் அறிவிப்பால் தைவானில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தைவான் தனது இராணுவத்தை தயாராக வைத்திருந்த நிலையில், சீன ஜனாதிபதியின் அறிவிப்பையடுத்து, தைவான் தனது இராணுவத்தை மேலும் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தைவான் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: