பிரித்தானியா மீது கோவத்தை காட்டும் வடகொரியா!

Wednesday, August 23rd, 2017

பிரித்தானிய  இராணுவத்தினர் அமெரிக்காவின் கூலிப்படைகள் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஒரே எதிரி அது அமெரிக்கா மட்டுமே, அந்த நாடு தங்களை சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள வடகொரியாவின் பார்வை தற்போது பிரித்தானியா மீது திரும்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையே நடைபெற்றுவரும் ராணுவ கூட்டுப்பயிற்சியில் பிரித்தானிய ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தான் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், பிரித்தானிய ராணுவத்தினரை அமெரிக்காவின் கூலிப்படைகள் என அழைத்து ஏளனம் செய்துள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய ராணுவத்தினரும் குறித்த கூட்டுப்பயிற்சியில் உதவி செய்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பிரித்தானிய ராணுவத்தினரை அமெரிக்காவின் கூலிப்படைகள் என ஏளனம் செய்துள்ளார். போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட இருநாடுகளும் அணுவாயுத தாக்குதலை கொரியா தீபகற்பத்தில் ஊக்குவுக்கும் வகையில் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா,

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் தென் கொரிய போர் வெறி பிடித்தவர்களும் இணைந்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த பயிற்சியில் சுரங்க ரயில் பாதையில் நச்சு வாயு புகுந்தால் மேற்கொள்ள வெண்டிய நடவடிக்கைகள், கடை வீதிகளில் தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அனடவடிக்கைகள் என பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.

Related posts: