கொரோனா வைரஸ் : சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

Wednesday, March 18th, 2020

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் சீனாவுக்கு வெளியே இத்தாலிக்கு அடுத்து ஈரானில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஈரானில் 853 பேர் பலியாகியுள்ளனர், 14,991 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் கைதிகள் உட்பட சுமார் 85,000 கைதிகளை ஈரான் தற்காலிகமாக விடுவித்துள்ளது என்று அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் பாதுகாப்பு தொடர்பான கைதிகள். மேலும் சிறைகளில் நாங்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெயிலி கூறினார். மார்ச் 10ம் திகதி, அதன் நெரிசலான மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட சிறைகளில் இருந்து அனைத்து அரசியல் கைதிகளையும் தற்காலிகமாக விடுவிக்குமாறு ஈரானில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஈரானிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்

Related posts: