இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் அமைச்சர் திடீா் இராஜினாமா – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் தகவல்!

Tuesday, June 11th, 2024

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் (Israeli war cabinet minister Benny Gantz) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தடுப்பதாகவும், அதனால்தான், தான் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமைச்சர் பென்னி கன்ட்ஸ்வை பதிவி விலக வேண்டாம் எனவும், போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கேட்டுக்கொண்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த அமைச்சரின் பதவி விலகல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக அமையும் என குறிப்பிடப்படுகின்றது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில், போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதனை நிராகரித்து வருகிறது. ஹமாசை அழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக உள்ளார்.

தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: