ஆண் – பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை – சவுதி அரேபியா!

Tuesday, December 10th, 2019

சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் – பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.

எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. பல உணவகங்கள், காபிக் கடைகள், சந்திக்கும் இடங்கள் போன்றவை இத்தகைய பாலினப் பிரிவினை முறையை கைவிட்டுவந்தன.

சவுதி அரேபியாவில் அடுத்தடுத்து இப்படிப் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரம், கருத்து மாறுபடும் உரிமை பெரிய அளவில் நசுக்கப்பட்டும் வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாகப் பயணிப்பதற்கு இருந்த தடையை ரத்து செய்த சௌதி, கடந்த ஆண்டு பெண்கள் வண்டி ஓட்டுவதற்கு இருந்த தடையை அகற்றியது.

Related posts: