டிரம்பை பதவி நீக்க நடவடிக்கைக்கு தயாராகும் செனட் சபை!

Friday, January 17th, 2020


ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்பு “பாரபட்சம் இல்லாத நீதியை” வழங்குவோம் என்று செனட் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அமெரிக்காவில் அடுத்து நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும்.

இதற்கான விசாரணை ஜனவரி 21 ஆம் திகதி தொடங்கவிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். அதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.

Related posts: