அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை!

Thursday, July 9th, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஒன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஒன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

ஒன்லைன் வகுப்புகள் நடத்தும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அரசின் அறிவிப்பு பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து உலகப் புகழ்பெற்ற ஹோவாட் மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்கள் பாஸ்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

அந்த மனுவில், ‘ஒன்லைன் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும். அது சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும். குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை எடுத்துள்ள முடிவில் மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. உரிய காலஅவகாசம் வழங்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: