490 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை – தடுமாறும் தென்னாபிரிக்கா!

Monday, July 23rd, 2018

கொழும்பு சிங்கள கிறிக்கெற் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு 490 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 338 ஓட்டங்கள் குவித்தது. டி சில்வா அதிகபட்சமாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 124 ஓட்டங்களில் சுருண்டது. அதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 3ஆம் நாளான இன்று 5 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இலங்கை தரப்பில் கருணரத்னே 85 ஓட்டங்களும், மேத்யூஸ் 71 ஓட்டங்களும், குணதிலகா 61 ஓட்டங்களும் குவித்தனர். ரோஷன் சில்வா 32 ஓட்டங்களுடனும், டிக்வெல்ல 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ் 3 விக்கெட்டுகளும், நிகிடி ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரர் மார்க்கரம் 14 ஓட்டங்களில் ஹேராத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், டீன் எல்கர் 37 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

முதல் இன்னிங்ஸைப் போலவே இலங்கை அணி 2வது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்து வீசியது. ஆம்லா 6 ஓட்டங்களிலும், டூபிளிசிஸ் 7 ஓட்டங்களிலும், மகாராஜ் ஓட்டங்கள் எதுவும்

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவை.

தென் ஆப்பிரிக்காவின் புரூயின் 45 ஓட்டங்களுடனும், பவுமா 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ஹேராத் 2 விக்கெட்டுகளும், தனஞ்செயா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

Related posts: