பயிற்சியாளராக களம் இறங்குகிறார் பொண்டிங்!

Tuesday, January 3rd, 2017

அவுஸ்திரேலிய டி20 அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையேயான டி20 தொடர் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய டி20 அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் மற்றும் உதவி பயிற்சியாளராக ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது இவர்களுடன் சேர்ந்து துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பொண்டிங் பணியாற்றுவார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக பான்டிங் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இரு தொடர்களுக்கு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த டி20 தொடருக்கு பின் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு இவர்கள் மூவரும் பயிற்சி கொடுப்பார்கள் என தெரிகிறது. இது குறித்து பொண்டிங் கூறியதாவது, லாங்கர், கில்லஸ்பியுடன் இணைந்து பணியாற்ற உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் அவுஸ்திரேலிய அணியில் உள்ளனர். இவர்களை கொண்டு வலுவான டி-20 அணியை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: