நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி!

Tuesday, December 4th, 2018

2 டெஸ்ட் போட்டிகள் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் அணி இன்று இரவு நியூசிலாந்து செல்லவுள்ளது.

கடந்த தினம் அறிவிக்கப்பட்ட இலங்கை டெஸ்ட் குழாமில் லஹிரு திரிமான்ன மற்றும் நுவன் பிரதீப் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.

இரு நாடுகளுக்கிடையிலும் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி வெலின்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை , நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று காலை பதிவுத்திருமணம் செய்துக் கொண்டார். இதன்போது, திருமண சாட்சியாளர்களாக சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க கைசாத்திட்டுள்ளனர்.

Related posts: