தென்ஆபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் ஓய்வு!

Saturday, March 3rd, 2018

தென்ஆபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

தென்ஆபிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல். 33 வயதாகும் இவர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தென்ஆபிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியா தொடர் வரை 83 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சுமார் 12 வருடங்களாக தென்ஆபிரிக்கா அணிக்காக விளையாடி வந்த மோர்னே மோர்கல் இன்று தொடங்கும் தென்ஆபிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், பவுன்ஸ் ஆடுகளத்திலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் மோர்னே மோர்கல் வல்லவர். 83 டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுக்களும், ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுக்களும், ரி 20 போட்டிகளில் 47 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து மோர்னே மோர்கல் கூறுகையில் ‘‘இந்த முடிவானது மிகவும் கடினமானது. என்றாலும் புதிய வாழ்க்கையை தொடங்க இதுதான் சரியான நேரமாக கருதுகிறேன். எனக்கு இளமையான குடும்பமும், வெளிநாட்டு மனைவியையும் உள்ளனர்.

தற்போதைய சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை எங்களுக்கு மிகப்பெரிய அளவில் சிரமமாக உள்ளது. குடும்பத்தின் நலன்தான் முக்கியம். அவர்கள் நலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்’’ என்றார்.

2006இல் இந்திய அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட மோர்னே மோர்கல் அப்போதிலிருந்தே தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து துறையில் முக்கிய அங்கம் வகித்தார். 2009இல் மகாயா நிடினி ஓய்வு பெற்ற பிறகு டேல் ஸ்டெய்னின் உறுதுணையாக மோர்கல் செயற்பட்டார்.

ஸ்டெய்ன், வேர்னன் பிலாண்டர் இல்லாத நிலையில் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை வழிநடத்தவும் செய்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளராகவும் மோர்னே மோர்கல் விளங்கினார்.

அதிலும், அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் ஒரு கட்டத்தில் முதல் 10 பந்துவீச்சாளராகள் பட்டியலிலும் இடம்பிடித்திருந்ததுடன், 2011இல் ஒரு நாள் பந்துவீச்சாளர்களில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அந்த அணிக்காக இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளிலும், 117 ஒரு நாள் போட்டிகளிலும், 44 ரி-20 போட்டிகளிலும் மோர்னே மோர்கல் விளையாடியுள்ளதுடன், இதில் 294 டெஸ்ட், 188 ஒரு நாள் மற்றும் 44 ரி-20 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அனைத்துவகை போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 529 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தென்னாபிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள 5ஆவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: