” எல்லே”  தொடர்: இறுதிக்குள் நுளைந்தது சென். பற்றிக்ஸ்!

Sunday, May 13th, 2018

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

சென். பற்றிக்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி 40 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குக் களமிறங்கிய சாவகச்சேரி இந்துக் கல்லூரிஅணியும் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா 10 பந்துகள் மேலதிகமாக வழங்கப்பட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் 4 ஓட்டங்களைப் பெற்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியால் 2 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இதையடுத்து 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.

Related posts: