இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் வெற்றி!

Tuesday, July 18th, 2017

உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படும் நடப்பு ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயத்தின் 10வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 306.196 கிலோ மீற்றர் என்ற பந்தய தூரத்தை இலக்குவைத்து 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.இதில் 1 மணி 21 நிமிடம் 27.430 வினாடிகளில் வெற்றி இலக்கை கடந்து லீவிஸ் ஹெமில்டன் 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

இந்த தொடரில் அவரது 4வது வெற்றி இதுவாகும். அத்துடன் பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹெமில்டனின் 5வது வெற்றியாக அமைந்தது.பின்லாந்து வீரர் வோல்டெரி போட்டாஸ் 2வது இடத்தினையும்இ பின்லாந்தின் கிமி ராகோனன் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதுவரை நடந்துள்ள 10 சுற்றுகள் முடிவில் சம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெட்டல் 177 புள்ளிகளுடன் முதலிடத்திலும்இ ஹெமில்டன் 176 புள்ளிகளுடன் 2வது இடத்திலும்இ போட்டாஸ் 154 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர். அடுத்த சுற்று போட்டி ஹங்கேரியில் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts: