சகல துறைப் போட்டிகளுக்கும் தலைவர் நியமனம்

Friday, September 15th, 2017

 

இதுகாலவரை , டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமைத்துவம் வகித்த , தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் டூ பிளேசிஸ் , இனி வரும் காலங்களில் , ஒரு நாள் ஆட்டப் போட்டிகளுக்கும் அணித்  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

தற்பொழுது லாஹூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான பன்னாட்டு அணிகளின் போட்டிகளில் , பன்னாட்டு அணிக்கு இவரே தலைவராக உள்ளார் . இதுகாலவரை ஒருநாள் ஆட்டப் போட்டிகளில் தலைமைத்துவம் வகித்த வில்லியஸ் , தன் பதவியில் இருந்து விலகியதை அடுத்தே , இவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது . வில்லியஸ் காயப்பட்டது காரணமாக , முன்பொரு தடவை , அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத் தொடருக்கு  இவர் பொறுப்பேற்று, 5-0 என்ற கணக்கில் தென் ஆபிரிக்கா வென்றமை இங்கே குறிப்பிடத்தக்கது

 

Related posts: