‘ஆசிய ரக்பி செவன்ஸ்’ போட்டி இன்று கொழும்பில்!

Saturday, October 15th, 2016

அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி செவன்ஸ் கிண்ண போட்டிகளின் இறுதிப் பாகம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. இலங்கை ரக்பி அணி, கடந்த இரு பாகங்களிலும் இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில் இம்முறை போட்டிகளில் பங்குகொள்ள உள்ளது.

இந்நிலையில், நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிப் பாகத்தில் இலங்கை அணி குழு B இல் சீனா, சீன தாய்பேய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் போட்டியிட உள்ளது. குழு A இல் ஹொங் கொங், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை அணி, சீன தாய்பே அணியை 43-12 எனவும் சிங்கப்பூர் அணியை 27–05 எனவும் முன்னைய போட்டிகளில் இலகுவாக வெற்றி கொண்டது. இதனால் இம்முறையும் இலங்கை அணி இவ்விரு அணிகளையும் குழு மட்ட போட்டிகளில் இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் சீன அணியை இலங்கை அணி 19-17 என்ற புள்ளிகள் வீதத்தில் கடினமான போட்டியின் பின்னரே ஹொங் கொங்கில் இடம்பெற்ற பாகத்தில் வெற்றிக்கொண்டது. பின்னர் தென் கொரியாவில் நடைப்பெற்ற போட்டியில் 26–21 என்று தோல்வியுற்ற போதிலும் தென் கோரிய அணியை 26–10 என வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இரண்டாம் நாள் நடைபெற உள்ள அரையிறுதி சுற்றுக்கு தெரிவாக, குழு மட்டத்தில் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. ஆசியாவின் ரக்பி ஜாம்பவானாகத் திகழும் ஜப்பான் அணி சார்பாக புதுமுக வளர்ந்து வரும் அணியே பங்கு கொள்வதால் குழு ஏ இல் தென் கொரியா மற்றும் ஹொங் கொங் ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி, ஹொங் கொங் அணியுடன் இடம்பெற்ற இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடிய நுட்பங்களில் பாரிய வித்தியாசம் காணப்பட்டது. இலங்கை அணி முதல் பாக இறுதிப் போட்டியில் 17–22 என்று தோல்வியுற்றது. அதுபோல், இரண்டாம் பாக இறுதிப் போட்டியில் 36-00 என தோல்வியுற்றது. இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் ரக்பி வீரருமான மெடீ டர்னர் இது பற்றி கூறும்போது “கண்டிப்பாக அவர்களுடன் மோதும் போது நாம் நமது நுட்பங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இரண்டு வாரங்களாக நாம் இதற்கான பயிற்சிகளிலேயே ஈடுபட்டோம்” எனத் தெரிவித்தார்.

இலங்கை அணி விபரம்:

தனுஷ்க ரஞ்சன் (தலைவர்) , ஸ்ரீநாத் சூரியபண்டார , ரிச்சர்ட் தர்மபால , துலாஜ் பெரேரா , தனுஷ் தயான் , காஞ்சன ராமநாயக்க , தரிந்த ரத்வத்த , கவிந்து பெரேரா, ஜேசன் திசாநாயக்க, கெவின் டிக்சன், சுதர்ஷன முதுதந்திரி, ஒமல்க குணரத்ன.

90col151102624_4886553_14102016_aff_1

Related posts: