இலங்கை அணிக்கு  சிறந்த பாதுகாப்பு – பாகிஸ்தான் !

Monday, October 16th, 2017

பாகிஸ்தான் வந்து விளையாடும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த கிரிக்கெட் அணியும் இதுவரை முன்வரவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணிஇ ஐக்கிய அரபு எமிரேட்ஸை தனது சொந்த மண்ணாக கருதி அங்கு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட்இ 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில்இ ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் பின் டி20 தொடர் நடைபெறவுள்ளது.

டி20 தொடரின் மூன்றாவது போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மேலாளர் தலாத் அலிஇ பாகிஸ்தான் வரும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்இ சமீபத்தில் பாகிஸ்தானுக்கு உலக லெவன் அணி வந்து மூன்று போட்டிகளில் விளையாடியது. அப்போது வீரர்களுக்கு வழங்கப்பட்ட பாதுக்காப்பினை கண்டு அவர்கள் வியப்படைந்தனர்.

இதானால் இலங்கை அணியும் தங்கள் நாட்டிற்ககு வந்து விளையாடினால்இ இன்னும் பல நாடுகளை இங்கு விளையாட வைக்க வழிவகைகள் செய்ய உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Related posts: