கோஹ்லி, ஜாதவ் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி!

Monday, January 16th, 2017

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று புனேயில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அணித்தலைவர் கோஹ்லி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக ஜாசன் ரோய், அலெக்ஸ் ஹால்ஸ் ஆகியோர்கள் களமிறங்கினார்கள்.

தொடக்க முதலே ஜாசன் ரோய் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் நிதானமாக ஆடிய ஹால்ஸ் (9) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ஜாசன் ரோய் (73) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் மோர்கன் 28 ஓட்டங்கள் சேர்த்தார்.

பட்லர் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் (78) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் அணியின் ஓட்டங்களை மளமளவென உயர்த்தினார். அவர் 40 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரி உட்பட 62 ஓட்டங்கள் சேர்த்தார். மொயீன் அலி 28 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 350 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில், பாண்ட்யா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 351 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ராகுல் (8), தவான் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் (15) சொதப்ப, டோனியும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்தியா 63 ஓட்டங்களுக்கே 4 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் கோஹ்லி, கெடார் ஜாதவ் அதிரடியாக செயல்பட்டனர்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றது. கோஹ்லி 105 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர் என 122 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தது.

பின்னர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஜாதவும் சதம் அடித்தார். அவர் 76 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என மொத்தம் 120 ஓட்டங்கள் சேர்த்தார். ஜடேஜா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாண்ட்யா (40), அஸ்வின் (15) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதனால் இந்திய அணி 48.1 ஓவரிலே 7 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: