காலிறுதிக்கு முன்னேறியது ரஷ்யா!

Monday, July 2nd, 2018

உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதன் முறையாக முன்னேறியது ரஷ்யா. நேற்று நடந்த ‘ரவுண்டு–16’ போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4–3 என ஸ்பெயினை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின் ரசிகர்கள் தோல்வி தந்த வலியால்(‘பெயின்’) தவித்தனர்.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் நேற்று ‘நம்பர்–10’ இடத்தில் உள்ள ஸ்பெயின் 70வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை சந்தித்தது. 11வது நிமிடம் ஸ்பெயின் அணிக்கு ‘பிரீ கிக்’ கிடைத்தது. இதை அசென்சியோ ரஷ்ய கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். அப்போது அருகில் இருந்த ஸ்பெயின் கேப்டன் ராமோசை தள்ளி விட்டார் செர்ஜி இக்னஷிவிச். துரதிருஷ்டவசமாக இவரது காலில்பட்டு பட்டு உள்ளே செல்ல ‘சேம் சைடு’ கோல் ஆனது. ஸ்பெயின் அணி 1–0 என முன்னிலை பெற்றது.

41வது நிமிடம் ‘கார்னர் கிக்கில்’ கிடைத்த பந்தை சமதேவ் தலையில் அடித்து கோலாக்க முயன்றார். பந்து அருகில் இருந்த ஜெரார்டு பிக்கே (ஸ்பெயின்) கையில் பட்டதால் ரஷ்யாவுக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதில் டிஜுபா கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என சமன் ஆனது.

அதிக ‘பாஸ்’: போட்டி நேரத்தில் 845 முறை ஸ்பெயின் வீரர்கள் ‘பாஸ்’ செய்த போதும் (ரஷ்யா 227) ஸ்பெயின் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்ட முடிவில் (90 நிமிடம்) ஸ்கோர் 1–1 என முடிய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது.

கூடுதல் நேரம்: தலா 15 நிமிடங்கள் கொண்ட இதன் முதன் பாதியில் அசென்சியோ (90+10வது) பிக்கே (90+15வது) அடித்த பந்துகளை ரஷ்ய கோல் கீப்பர் அகின்பீவ் சிறப்பாக தடுக்க ஸ்கோர் 1–1 என நீடித்தது. தொடர்ந்து ரஷ்ய கோல் கீப்பர் அகின்பீவ் அரணாக நின்று தடுக்கஇ கூடுதல் நேரத்திலும் ஆட்டம் சமன் (1–1) ஆனது.

‘திரில்’ வெற்றி: வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட்’ அவுட்டுக்கு சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்படும். இதில் அதிக கோல் அடிக்கும் அணி வெற்றி பெறும்.

முதல் வாய்ப்பு: இனியஸ்டா (ஸ்பெயின்) ஸ்மோலவ் (ரஷ்யா) கோல் அடித்தனர் (1–1).

2வது வாய்ப்பு: பிக்கே (ஸ்பெயின்) செர்ஜி இக்னஷிவிச் (ரஷ்யா) கோல் அடித்தனர் (2–2).

3வது வாய்ப்பு: கோகே (ஸ்பெயின்) வலது புறம் அடித்த பந்தை கோல் கீப்பர் அகின்பீவ் தடுத்தார். கோலோவின் (ரஷ்யா) கோல் அடித்த 2–3 என முந்தியது ரஷ்யா.

4வது வாய்ப்பு: ராமோஸ் (ஸ்பெயின்)இ செர்ரிஷேவ் (ரஷ்யா) கோல் அடித்தனர் (3–4).

5வது வாய்ப்பு: இயாகோ அஸ்பாஸ் (ஸ்பெயின்) அடித்த பந்து அகின்பீவ் இடது காலில் பட்டு வெளியே சென்றது. இதனால் 5வது வாய்ப்பை பயன்படுத்தாமல் ரஷ்யா 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முதன் முறையாக முன்னேறியது ரஷ்யா.

உலக கோப்பை தொடரை நடத்தும் அணிகளை ‘நாக் அவுட்’ சுற்றில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது இல்லை. 1934ல் இத்தாலி (காலிறுதி கூடுதல் நேரம் 0–1) 1950ல் பிரேசில் (பைனல் சுற்று 1–6) 2002ல் தென் கொரியா (காலிறுதி கூடுதல் நேரம் 3–5) தற்போது ரஷ்யாவிடம் (‘ரவுண்டு–16’ கூடுதல் நேரம் 3–4) வீழ்ந்தது.

உலக கோப்பை தொடரில் ‘சேம் சைடு’ கோல் அடித்த ‘சீனியர்’ வீரர் ஆனார் ரஷ்யாவின் செர்ஜி இக்னஷிவிச் (38 வயது 352 நாட்கள்). இதற்கு முன் 37 வயது 43வது நாளில் நோயல் வல்லாடேர்ஸ் (ஹோண்டுராஸ்) முதலிடத்தில் (எதிர்–பிரான்ஸ்இ 2014) இருந்தார்.

ரஷ்ய வீரர் செர்ஜி இக்னஷிவிச் ‘சேம் சைடு’ கோல் அடித்தார். இது இத்தொடரில் அடிக்கப்பட்ட 10வது ‘சேம்சைடு’ கோல். இதற்கு முன் 1998 உலக கோப்பை தொடரில் 6 முறை இதுபோல் கோல் அடிக்கப்பட்டது.

Related posts: