IPL 2018 : ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்!

Monday, January 15th, 2018

2018 இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டிகளுக்காக, 1,122 வீரர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

அவர்களுல் க்ரிஸ் கெய்ல், யுவராஸ் சிங், ஜோ ரூட், ஷேன் வொட்ஷன் ஆகிய பிரபல கிரிக்கட் வீரர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில், பெங்குளுரில் ஏலத்தில் விடப்படவுள்ளனர்.

அவர்களுல் வெளிநாட்டு வீரர்கள் 282 பேர் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய, 58 அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் 39 இலங்கை வீரர்களும் குறித்த ஏல விற்பனையில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்களுல் லசித் மாலிங்க, அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் திஸர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்தியாவின் யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், அஷ்வின், ரகானே போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், ஆப் ஸ்பின்ர் ஹர்பஜன் சிங் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சர்வதேச வீரர்களைப் பொருத்தவரை கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் முன்னணியில் உள்ளனர்.

பெங்களூரு அணியில் விளையாடிய கெயில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை, அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்கிறார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கிறார்.

Related posts: