பயிற்சியாளர் பதவிக்காக நிர்வாகக் குழுவில் இருந்து விலகிய அணித்தலைவர்!

Friday, August 30th, 2019


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில், முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.இதற்காக அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர் டீன் ஜோன்ஸ் விண்ணப்பித்துள்ள நிலையில், வேறு வெளிநாட்டு வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை.

Related posts: