இலங்கை – லித்துவேனியா உதைபந்தாட்டப் போட்டி முடிவு!

Monday, July 9th, 2018

இலங்கை மற்றும் லித்துவேனியா அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
கொழும்பு பழைய குதிரைப்பந்தய திடலில் இருஅணிக்கும் இடையில் இடம்பெற்ற சர்வதேச உதைபந்தாட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இலங்கையில் பல வருடங்களின் பின்னர் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.
லித்துவேனிய அணிக்கு எதிராக கடுமையான சவாலை விடுக்க தமது அணியால் முடிந்திருப்பதாக இலங்கை அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் தெரிவித்துள்ளார். பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை உதைபந்தாட்ட அணி இன்று ஜப்பானுக்குப் புறப்பட்டுச் செல்கிறது.

Related posts: