சஞ்சயனின் அசத்தல் சதத்தினால் யாழ் மத்திய கல்லூரி வெற்றி!

Friday, June 22nd, 2018

சஞ்சயன், கவிதர்சன் ஆகியோரின் சகலதுறையாட்டம் யாழ்ப்பாணம் மத்திக்கு தனித்துப் பலம் சேர்க்க மேலுமொரு வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்;டச் சங்கம் ஒழங்கமைத்து நடத்தும் பாடசாலைகளின் 15 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சஞ்சயனின் மீண்டுமொரு சதம் யாழ் மத்திய கல்லூரி அணிக்கு கைகொடுக்க 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை எடுத்து தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சஞ்சயன் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும் கவிதர்சன் 81 ஓட்டங்களையும் கஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பாக விஸ்ணுகாந்த் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய யாழ் கல்லூரி அணி 25 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்;டத்தில் எஸ்.சுருதிகன் 31, அகுபின் 25, விஸ்ணுகாந்த் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ் மத்திய கல்லூரி அணி சார்பாக கௌதர்சன் 26 ஓட்;டங்களுக்கு 4 விக்கெட்களையும் சஞ்சயன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பலே ஒன்னுக்குத் தள்ளப்பட்ட யாழ் கல்லூரி அணி மீண்டும் இரண்டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. ஆட்டநாள் முடிவில் 17 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்களை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கௌசிகன் 18, நிகாரிலன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ் மத்திய கல்லூரி அணி சார்பாக சஞ்சயன் 3 விக்கெட்களையும் கவிதர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் முடிவு எட்டப்படாதவிடத்து முதல் இனிங்ஸில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்ற அணியாகத் தெரிவு செய்யப்படும் போட்டி விதிமுறைக்கமைய யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

Related posts: