ரோஹித் ருத்ர தாண்டவம் : தொடரை வென்றது இந்தியா

Saturday, December 23rd, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி இந்தூர் மைதானத்தில் சாதனை நிறைந்த போட்டியாக நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் போட்டியைப்போலவே இந்த போட்டியிலும் பாரிய வீழ்ச்சியை இலங்கை அணி சந்தித்துள்ளது. இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் பெற்றது.T20 போட்டிகளின் உலக சாதனை 263 என்பதும் குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக குறித்த சாதனையை நிகழ்த்தியிருந்தது.

அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக43 பந்துகள் எதிர்கொண்டு 10சிக்ஸ்களும், 12 பவுண்டரிகளும் அடங்கலாக 118 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய இவர் 35 பந்தில் சதமடித்து வேகமான T20 உலக சாதனையையும் சமன்செய்தார். தென்னாபிரிக்காவின் டேவிட் மிலர் பங்களாதேஸிற்கு எதிராக இரு மாதங்களின் முன்னர் குறித்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் 49 பந்தில் 8 சிக்ஸ்சர் அடங்கலாக 89 ஓட்டங்கள் எடுத்தார்.T20 போட்டியில் 2016ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 244 ஓட்டங்கள் எடுத்திருந்ததே இதுவரை இந்திய சாதனையாக இருந்தது. பந்துவீச்சில் அனைவரும் சரமாரியான ஓட்டங்களை வாரி வழங்கினார்கள். பெரெரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.

261 எனும் கடின இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 17.2 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்யடைந்தது.

இலங்கை அணியின் குசல் பெரெரா மற்றும் தரங்க சிறப்பான அதிரடி காட்டினாலும் கடைசி ஓவர்களின் அடுத்தடுத்து விக்கட்டுக்கள் இழக்கப்பட்டன. 11 வீரர்களின் 3 வீரர்கள் மற்றும் மத்தியூஸ் உட்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தோடு ஆட்டமிழந்தார்கள். மீண்டும் சுழற்பந்திற்கு சுருட்டப்பட்டார்கள். சஹால் 4 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வானார் ,தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இடம்பெறவுள்ளது.

Related posts: