ஜெரோம் டெய்லர் ஓய்வு!
Tuesday, July 12th, 2016
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜெராம் டெய்லர் இதுவரையில் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இவர் இடம்பெறாததே இந்த முடிவுக்கு காரணம் என தெரிகிறது. எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம்!
ஒலிம்பிக் மரதனோட்டம்: தங்கம் வென்றவருக்குத் தடை!
19 முறை சூதாட்டம்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!
|
|
|


