சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம்!

Friday, January 20th, 2017

அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடு்த்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 84 ஓட்டங்கள் எடுத்தார்.

100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்கள் எடுத்தார், இதற்கு முன்பாக 20 போட்டிகளில் பங்கேற்று 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இன்றைய போட்டியில் 47 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் விரைவாக 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ்(22 போட்டிகள்), இங்கிலாந்தின் கெவீன் பீட்டர்சன்(21 போட்டிகள்) 1000 ஓட்டங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: